ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் அக்டோபர் 18-ஆம் தேதி பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் வன்முறையைத் தூண்டும் மிரட்டல் ரீல்ஸ் பதிவுகள் அதிகரித்தன. இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
ஒரு பதிவுக்கு ரூ.400 வழங்கியதாக விசாரணையில் தகவல்
சில இளைஞர்கள், தங்களுக்கு பணம் வழங்குவதாகக் கூறி ரவுடி கும்பல்கள் கொடுத்த வீடியோக்களைத் தங்களது கணக்குகளில் பதிவிட்டதாக தெரிவித்தனர். ஒரு பதிவுக்கு ரூ.400 வீதம் வழங்கப்பட்டதாகவும், பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள் மற்றும் பின்னணி இசை குறித்த வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை வன்முறையைத் தூண்டிய 41 இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் 3 முகநூல் கணக்குகள் என மொத்தம் 44 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொலை வழக்கில் மானாமதுரை, திருமங்கலம், உடைகுளம், திருப்புவனம், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். Sivaganga social media violence மீண்டும் பரவாமல் தடுக்க, சமூக வலைதளங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாக மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.






























