Île-de-France பகுதி யில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளுக்காக புதிய வங்கி அட்டை மூலம் டிக்கெட் வாங்கும் சேவை 2026 ஜூலை மாதம் முதல் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை Île-de-France Mobilités செயல்படுத்துகிறது. குறிப்பாக அரிதாகப் பயணம் செய்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது எளிதான மாற்று தீர்வாக இருக்கும்.
எப்படி செயல்படும்?
பேருந்து மெட்ரோ அல்லது ரயில் நிலையங்களில் நிறுவப்படும் சிறப்பு Validator கருவியில் உங்கள் Contactless வங்கி அட்டையைத் தொட்டு டிக்கெட்டை வாங்கலாம்.
- பச்சை விளக்கு எரிந்ததும் வாங்குதல் உறுதிப்படுத்தப்படும்.
- ஒரே வங்கி அட்டையில் ஒரே நேரத்தில் 4 பேருக்கான டிக்கெட்டுகள் வாங்கலாம்.
- Orly விமான நிலைய வழித்தடத்தில் 5 பேர்வரை அனுமதி.
- QR Code மூலம் ரசீது பெறலாம்.
- டிக்கெட் பரிசோதனையின் போது உங்கள் வங்கி அட்டையே வாங்கியதற்கான சான்றாக பயன்படுத்தப்படும்.
முக்கிய கவனம்
வங்கி அட்டையால் வாங்கப்படும் டிக்கெட்
- வாங்கிய அதே பாதையில் மட்டுமே செல்லுபடியாகும்.
- 1 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும்.
- போக்குவரத்து மாற்றங்கள் (Correspondances / Connections) இதில் சேர்க்கப்படாது.
புதிய கட்டணங்கள்
| பயண வகை | கட்டணம் |
|---|---|
| பேருந்து / டிராம் / Funiculaire | €2.55 |
| மெட்ரோ / ரயில் / RER | €3.35 |
| விமான நிலைய பயணம் | €14.80 |
இவை சாதாரண டிக்கெட் விலையை விட முறையே €0.50 முதல் €0.80 வரை அதிகமாக இருக்கும்.
அமல்படுத்தும் கால அட்டவணை
- 30 ஜூன் 2026 Orly Airport மெட்ரோ 14 வெளியேறும் பகுதியில்.
- 8 ஜூலை 2026 Montmartre Funicular.
- ஜூலை 2027 Paris Metro Line 1.
- 2027 இறுதிக்குள் மெட்ரோ 4, 14, 15, 18.
- 2028 இறுதிக்குள் மெட்ரோ 7, 12 மற்றும் முழு பேருந்து வலையமைப்பு.
- 2030க்குள் மீதமுள்ள ரயில் வலையமைப்பு முழுவதும்.
தற்போது பாரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 1,300 பேருந்துகளில் இந்த வசதி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. 2026 ஆகஸ்ட் இறுதிக்குள் அனைத்து பேருந்துகளிலும் இந்த வசதி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







Leave a Reply