நான்கு நாட்கள் நடைபெற்ற சர்வதேச நடவடிக்கை
‘Communis Maris’ எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை 2026 அக்டோபர் 5 முதல் 8 வரை நடைபெற்றது. அல்ஜீரியா, சைப்ரஸ், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி, லிபியா, மால்டா, மொராக்கோ, போர்ச்சுகல், செனகல், ஸ்பெயின், சிரியா, துனிசியா, துருக்கி உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 7,660 அதிகாரிகள் இதில் ஈடுபட்டனர்.
நடவடிக்கையின்போது 378,000-க்கும் மேற்பட்டோர் சோதனை செய்யப்பட்டனர். 221 பேர் குடியேற்றக் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், மனிதக் கடத்தல் குற்றச்சாட்டில் 16 பேரும், போலி ஆவணங்களை தயாரித்து பயன்படுத்தியதாக 25 பேரும் அடையாளம் காணப்பட்டனர். மொத்தம் 434 புதிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையில் மனிதக் கடத்தலின் சாத்தியமான 109 பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டதுடன், சட்டவிரோத குடியேற்ற நிலையில் இருந்த 1,715 பேர் கண்டறியப்பட்டனர். மரோக்கோ கடற்பரப்பில் 30 சிறார்களுடன் 70 பேர் பயணம் செய்த படகும், மௌரிட்டானியா அருகே செனகலில் இருந்து புறப்பட்ட 80 பேரைக் கொண்ட மரப்படகும் தடுத்து நிறுத்தப்பட்டன.
பிரான்சில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். சிரியாவில் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 22 சட்டவிரோத குடியேற்றத்தினர் தடுத்து வைக்கப்பட்டனர். ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன், ஏதென்ஸிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட Interpol migrant smuggling operation நடவடிக்கைக்கு Frontex மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பும் ஆதரவு வழங்கின.
































