இச்சட்ட முன்மொழிவு முதன்முதலில் 2025 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் தனியார் நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதோடு, முதலீட்டு பாதுகாப்பு சபை (Investment Security Board) ஒன்றை அமைத்து தகராறுகளை தீர்ப்பதற்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்துவதற்கும் சட்டபூர்வ மற்றும் ஒழுங்குமுறை உறுதித்தன்மையை வழங்குவதாகும்.
அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், இச்சட்டத்திற்கான கருத்துக் கடிதத்தை (Concept Paper) தயாரிக்க அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கை தற்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிதி அமைச்சர் ஆனுர குமார திசாநாயக்க அவர்களின் பரிந்துரையின் பேரில், சட்டமூல எழுத்தாளர் (Legal Draftsman) அவர்களுக்கு இச்சட்ட மசோதாவை தயார் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.





























