ஹோர்முஸ் நீரிணை – இராணுவ கப்பல்கள் வந்தால் போர்நிறுத்தம் மீறல்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணையை அணுகும் எந்த இராணுவ கப்பல்களும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக கருதப்படும் என ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் புரட்சிகர காவல்படை வெளியிட்ட அறிக்கையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு தீவிரமான மற்றும் தீர்மானமான பதில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இராணுவமற்ற கப்பல்கள் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றினால் பாதுகாப்பாக கடந்து செல்ல அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணை யில் கடற்படை மறியல் நடவடிக்கைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இரு வார போர்நிறுத்த ஒப்பந்தம் முறியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நீரிணை உலக எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான இடமாக இருப்பதால் அங்கு ஏற்படும் எந்த மோதலும் உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.





Leave a Reply