சமீபத்தில் அல்பேனியா பயணம் மேற்கொண்டபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார். இந்த ஒப்பந்தத்தின் படி மத்தியதரைக் கடலில் இத்தாலி கடற்படையால் மீட்கப்படும் சில சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் அல்பேனியாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவர்.
அந்த முகாம்கள் அல்பேனியாவில் இருந்தாலும், அவை முழுமையாக இத்தாலி அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் மற்றும் அங்கு அவர்களின் அகதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். குறிப்பாக ஆண் குடியேற்றக்காரர்கள் இந்த மையங்களுக்கு அனுப்பப்படலாம் பெண்கள் குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சனையுள்ளவர்கள் பொதுவாக விலக்கு அளிக்கப்படுவர்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், இத்தாலியில் அதிகரித்து வரும் குடியேற்ற அழுத்தத்தை குறைத்து அகதி விண்ணப்பங்களை வேகமாக செயல்படுத்துவதாகும். மேலும் இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும், புதிய குடியேற்ற விதிகள் 2026 ஜூன் மாதம் முதல் முழுமையாக அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் மனித உரிமைகள் மற்றும் குடியேற்றக்காரர்களின் பாதுகாப்பு குறித்து சிக்கல்களை ஏற்படுத்தலாம் என மனித உரிமை அமைப்புகள் மற்றும் சில அரசியல் தரப்புகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.




























