ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மேலாண்மைப் படிப்பில் கல்வி பயிலும் ஜயசூரியாவின் சர்வதேச பிரதிநிதித்துவத்தையும், காலநிலை மாற்றம் தொடர்பான அவரது ஆய்வுப் பங்களிப்பையும் அமைச்சர் பாராட்டினார். சுற்றுச்சூழல் கொள்கை உருவாக்கம் மற்றும் சர்வதேச அளவிலான இளைஞர் பங்கேற்பை தொடர்ந்தும் ஆதரிப்பதாக அவர் உறுதியளித்தார்.
டீனின் சிறந்த மாணவர் ஆராய்ச்சியாளர் விருது பெற்ற ஜயசூரியா தன்னுடைய நூலையும் அமைச்சரிடம் வழங்கினார். உப அமைச்சர் அன்டன் ஜயகொடி மற்றும் ஆலோசகர் டாக்டர் ரவீந்திர கரியவசம் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

































