இலங்கையில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது.
இலங்கையில் கல்கமுவ மஹகல்கடவல பிரதேசத்தில் 2026 ஏப்ரல் 21 ஆம் தேதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் சோதனையின் போது ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிக்கவெரட்டிய பிரிவு போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட இந்த சோதனையில் குறித்த மோட்டார் சைக்கிளில் இருந்த சந்தேகநபரிடமிருந்து 116 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 20 கிராம் 200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய கல்குலம பகுதியைச் சேர்ந்தவராகும். அவர் பின்னர் கல்கமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் 2026 ஏப்ரல் 22 ஆம் தேதி கல்கமுவ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை 03 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மேலதிக விசாரணைகள் கல்கமுவ பொலிஸாரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





Leave a Reply