கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது தாயார் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தாயார் கேட்டபோது, சின்னதுறை பகுதியைச் சேர்ந்த பிஜோ எஸ் தியோதான் காரணம் என மாணவி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
போக்சோ வழக்கில் பொறியியல் மாணவர் கைது
கோயில் திருவிழா ஒன்றில் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்ட பிஜோ எஸ் தியோ, பின்னர் செல்போன் மூலம் நீண்ட நாட்கள் பேசியதாகவும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகவும், விடுமுறை முடியும் வரை அவர் பலமுறை மாணவியைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீனாகுமாரி விசாரணை நடத்தினார். Kanyakumari POCSO case-ல் பிஜோ எஸ் தியோ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






























