மணவாளக்குறிச்சி வடக்கன்பாகத்தைச் சேர்ந்த ஸ்ரீவிக்னேஷ் (25), 21 வயது பெண்ணை காதலித்து வந்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜூன் 12ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு, ஸ்ரீவிக்னேஷ் தனது மனைவியுடன் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார்.
மருத்துவமனையில் பெண் அளித்த புகார்
கர்ப்பமான அந்த இளம்பெண், தக்கலை அரசு மருத்துவமனைக்கு சென்று கருவைக் கலைக்க வேண்டும் என தெரிவித்தார். மருத்துவர்கள் காரணம் கேட்டபோது, கரு தனது கணவர் மூலம் உருவானது அல்ல என்றும், மாமனார்தான் காரணம் என்றும் அவர் கண்ணீருடன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் மணவாளக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் அளித்தது. விசாரணையில், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கணவர் வீட்டில் இல்லாதபோதும், மாமியார் கோயிலுக்குச் சென்றிருந்த நேரத்திலும் மாமனார் பாலியல் தொல்லை அளித்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தும் அவர் நம்பவில்லை என்றும், பின்னர் சில நாள்களில் மாமனார் ஏழு முறை பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை வெளியே தெரிவித்தால் மாமனார் தற்கொலை செய்துகொள்வார் என கணவரும் மாமியாரும் மிரட்டியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் செல்வகுமார், ஸ்ரீவிக்னேஷ் மற்றும் ராஜேஸ்வரி ஆகிய மூவர் மீதும் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Kanyakumari sexual assault case தொடர்பாக மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.































