சந்தேக மரண வழக்கில் விசாரணை
சுவாமிதாஸ் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததாகக் கூறி, உறவினர்கள் அவரை இன்று அதிகாலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அவரது உடலில் பலத்த காயங்கள் இருப்பதும் தெரியவந்தது.
மருத்துவமனை தகவலின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுவாமிதாஸின் மகன் டேவிட்சனுக்கு மதுப் பழக்கம் இருந்ததும், மதுபோதையில் அவர் தினமும் தந்தையைத் தாக்கி சித்ரவதை செய்ததும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வீட்டுக்குச் சென்ற டேவிட்சன், தந்தையிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஆத்திரத்தில் அவரை அடித்து துன்புறுத்தியதுடன், இரவு முழுவதும் சித்ரவதை செய்து, இறுதியில் கழுத்தை நெரித்துக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. Kanyakumari son arrested சம்பவம் தொடர்பாக டேவிட்சனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.































