ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்ட மறைவிடத்தில் அவர் குளித்துக் கொண்டிருந்தபோது, பெற்றோர் உள்ளிட்டவர்கள் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.
சிறுமியின் புகாரில் வழக்குப்பதிவு
அப்போது அங்கு வந்த பொய்யுண்டார்கோட்டை மொட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த இளவரசன், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர். சிறுமி அலறியதும் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் வேம்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையின்போது குற்றத்தை இளவரசன் ஒப்புக்கொண்டதாக போலீஸார் கூறினர். தொடர்ந்து Orathanadu POCSO case-ல் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இளவரசன் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.































