கரீனா அணிந்திருந்த போபால் அரச குடும்பத்தைச் சேர்ந்த மரகதக் கழுத்தணியில் குர்ஆனின் புனித வசனமான ஆயத்துல் குர்சி பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புனித வசனத்தை ஆடை அலங்காரத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்துவது மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்று ஹபீஸ் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
புகைப்படங்களை நீக்கி மன்னிப்பு கோரிக்கை
சம்பந்தப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோர வேண்டும் என்றும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை முஸ்லிம் என்ற தனிப்பட்ட முறையில் எடுத்ததாக ஹபீஸ் விளக்கியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் காவல்துறை அல்லது நீதிமன்றம் மூலம் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கரீனா கபூர் அல்லது அவரது ஸ்டைலிஸ்ட் ரியா கபூர் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை.
குறித்த நிகழ்வில் கரீனா வெள்ளி நிற கஃப்தான் மற்றும் தலைப்பாகை அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த ஆபரணங்கள் போபால் அரச குடும்பத்தின் பாரம்பரியப் பொருட்கள் என்றும், அவை சைஃப் அலி கான் குடும்ப வழியாக வந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Kareena Kapoor legal notice விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கவனம் திரும்பியுள்ளது.

































