September 11, 2026
Breaking News
அமெரிக்காவில் 15 வயது சகோதரனை சுட்ட 11 வயது சிறுமி கைது சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் முக்கிய விவாதம் பிரான்ஸில் அடுத்த வாரமும் கோடை வெப்பம்; 32°C வரை உயரும் பிரான்ஸின் Haute-Corse பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸில் பெண்ணைக் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் 27 முறை பிடிபட்டவர் குழந்தைகள் தொடர்பான குடியேற்ற வழக்குகளில் இங்கிலாந்தில் தொடரும் சட்ட மாற்றங்கள் 2025ல் 3,000க்கும் மேற்பட்ட திறன் தொழிலாளர் அனுமதிகள் ரத்து விசா தடையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் பிரிட்டன் குடியேற்ற விவகாரங்களை அலசும் மாதாந்திர பாட்காஸ்ட் பிரிட்டன் வருகை விசாவில் புதிய பயணச் சரிபார்ப்புகள்; விண்ணப்பதாரர்களுக்கு எச்சரிக்கை EU குடிமக்கள் பயணக் கட்டுப்பாடுகள் வழக்கில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டுக்கு அனுமதி பிரிட்டனில் நாடுகடத்தல் வழக்குகளில் தொடரும் நீதிமன்ற ஆய்வுகள் காஞ்சிபுரத்தில் பிரசவத்தின்போது தாய், குழந்தை உயிரிழப்பு: விறகு வியாபாரி மீது வழக்கு ஐக்கிய இராச்சியத்தில் புகலிட மேல்முறையீட்டு நிலுவை 80,000-ஐ கடந்தது அமெரிக்காவில் 15 வயது சகோதரனை சுட்ட 11 வயது சிறுமி கைது சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் முக்கிய விவாதம் பிரான்ஸில் அடுத்த வாரமும் கோடை வெப்பம்; 32°C வரை உயரும் பிரான்ஸின் Haute-Corse பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸில் பெண்ணைக் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் 27 முறை பிடிபட்டவர் குழந்தைகள் தொடர்பான குடியேற்ற வழக்குகளில் இங்கிலாந்தில் தொடரும் சட்ட மாற்றங்கள் 2025ல் 3,000க்கும் மேற்பட்ட திறன் தொழிலாளர் அனுமதிகள் ரத்து விசா தடையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் பிரிட்டன் குடியேற்ற விவகாரங்களை அலசும் மாதாந்திர பாட்காஸ்ட் பிரிட்டன் வருகை விசாவில் புதிய பயணச் சரிபார்ப்புகள்; விண்ணப்பதாரர்களுக்கு எச்சரிக்கை EU குடிமக்கள் பயணக் கட்டுப்பாடுகள் வழக்கில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டுக்கு அனுமதி பிரிட்டனில் நாடுகடத்தல் வழக்குகளில் தொடரும் நீதிமன்ற ஆய்வுகள் காஞ்சிபுரத்தில் பிரசவத்தின்போது தாய், குழந்தை உயிரிழப்பு: விறகு வியாபாரி மீது வழக்கு ஐக்கிய இராச்சியத்தில் புகலிட மேல்முறையீட்டு நிலுவை 80,000-ஐ கடந்தது
முகப்பு News செய்தி
கிளிநொச்சியில் கிராமசேவையாளருக்கு எதிராக பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டம் | Kilinochchi People Protest Against Grama Sevak
News

கிளிநொச்சியில் கிராம சேவையாளருக்கு எதிராக பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

📅 வெளியீடு: 22 Dec 2025 03:20 🔄 புதுப்பிப்பு: 22 Dec 2025 03:20 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவிநகர் மற்றும் ஆராதிநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தமது கிராம சேவையாளரின் அலட்சியத்தை கண்டித்து இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தும், சம்பந்தப்பட்ட கிராம சேவையாளர் நேரில் வந்து நிலைமையை பார்வையிடவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கீழ்த்தரமான பேச்சு – மக்களின் ஆதங்கம்

தமது அவல நிலையை தொலைபேசி மூலம் தெரிவித்த குடும்பப்பெண்ணிடம்,
“சோத்துக்கு வழியில்லாதவர்களுக்கு சாமான் கொடுக்கவில்லை” என கிராம சேவையாளர் இழிவான வார்த்தைகளால் பேசியதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் ஆலோசனையின்படி, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டு, உரிய பதிவுகளை மேற்கொண்டு உதவிகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த போதும்,
பல வாரங்களாக வெள்ளத்தில் மூழ்கிய நிலையிலும் கிராம சேவையாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.

யுத்தத்திற்குப் பின் மீளக்குடியேற்றம் – தொடரும் வெள்ள அபாயம்

தம்பகாமம் KN 86 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட இந்த கிராமங்கள் யுத்தத்தின் பின்னர் படிப்படியாக மீளக்குடியேற்றப்பட்டன. காணியற்ற மக்களுக்கு அரச காணிகள் வழங்கப்பட்ட போதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாரி காலங்களில் இந்தப் பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறி வருகிறது.

இதன் காரணமாக, அன்றாட தொழில்களில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வசிக்கும் வீடுகளில் இடுப்பிற்கு மேல் வெள்ளம் நிற்பதால் ஐந்து மாதங்கள் வரை சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

குளம் புனரமைப்புக்கு தடையிடும் கிராம சேவையாளர்?

வெள்ளநீர் முறையாக வழிந்தோடுவதற்காக, அந்தப் பகுதியில் உள்ள குளம் ஒன்றை புனரமைப்பதற்கு கிராம அமைப்புகள் ஒன்றிணைந்து, ஏனைய அரச தரப்புகளிடமிருந்து அனுமதி பெற்றிருந்த போதிலும்,
கிராம சேவையாளர் அதற்கு தடையிட்டு வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தீர்வு கோரி மக்களின் கோரிக்கை

எனவே, பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் உடனடி தலையீட்டை மேற்கொண்டு,
வெள்ளப் பிரச்சினைக்கும் கிராம சேவையாளரின் செயல்பாடுகளுக்கும் உரிய தீர்வை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் குறித்து வேட்பாளர்கள் முன்வைத்த திட்டங்கள்
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் முக்கிய விவாதம்
11 Sep 2026
பிரான்ஸில் செப்டம்பர் மாத வெயில் நிறைந்த நகரக் காட்சி
பிரான்ஸில் அடுத்த வாரமும் கோடை வெப்பம்; 32°C வரை உயரும்
11 Sep 2026
Haute-Corse கிழக்குக் கரையில் இடியுடன் கூடிய மழை மேகங்கள்
பிரான்ஸின் Haute-Corse பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை
11 Sep 2026
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையிலான குடியேற்ற ஒப்பந்தம் தொடர்பான கடலோரக் காட்சி
சிறிய படகு குடியேற்றம்: பிரான்ஸ்-இங்கிலாந்து ‘ஒன்றுக்கு ஒன்று’ ஒப்பந்தம்
11 Sep 2026
பிரான்ஸ்–பிரிட்டன் குடியேற்றவர் பரிமாற்ற ஒப்பந்தம் தொடர்பான ஆங்கிலக் கால்வாய் காட்சி
பிரான்ஸ்–பிரிட்டன் குடியேற்றவர் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு காலேவில் எதிர்ப்பு
11 Sep 2026
ஐரோப்பிய குடியேற்ற எதிர்ப்பு அரசியல் மற்றும் திரும்பும் மையங்கள் குறித்த காட்சி
ஐரோப்பிய தீவிர வலதுசாரியில் ‘மறுகுடியேற்றம்’ கோரிக்கை அதிகரிப்பு
11 Sep 2026
பிரான்சில் வீட்டு உதவித்தொகை உயர்வை விளக்கும் நகர்ப்புற குடியிருப்பு காட்சி
பிரான்சில் வீட்டு உதவித்தொகைகள் அக்டோபர் 1 முதல் 1.15% உயர்வு
11 Sep 2026
பிரான்ஸில் பயிற்சி ஒப்பந்தத்தில் பணிபுரியும் இளைஞர்
2026ஆம் ஆண்டு பிரான்ஸில் பயிற்சியாளருக்கான குறைந்தபட்ச ஊதியம்
11 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading