திறன் தொழிலாளர் விசா திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு sponsor licence அவசியமாகும். அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் புதிய பணியாளர்களை ஆதரிக்க முடியாது.
குடியேற்ற விதிமீறல்களுக்கு எதிரான அமலாக்கம்
குடியேற்ற விதிகளை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் sponsor licence கண்காணிப்பும் முக்கிய பகுதியாக உள்ளது. நிறுவனங்களின் இணக்கத்தன்மை தொடர்பான ஆய்வுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதனுடன், சட்டவிரோதமாக பணியாற்றுவோரைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை உயர்த்தும் நடவடிக்கைகளும் அரசின் கவனத்தில் உள்ளன.
சட்டவிரோத பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒவ்வொரு நபருக்கும் விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத்தை 45,000 பவுண்டுகளாக உயர்த்தும் திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Skilled Worker sponsor licences ரத்து செய்யப்பட்ட எண்ணிக்கை, இங்கிலாந்தில் குடியேற்ற விதிகளை கடுமையாக அமல்படுத்தும் போக்கு தொடர்வதை காட்டுகிறது.































