மதுரை பைபாஸ் சாலையில் உள்ள நகைக்கடையில் கடந்த 12ஆம் தேதி அதிகாலையில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் சுமார் 11 கிலோ எடையுள்ள, பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11.9 கிலோ நகைகள் மீட்பு
நிஷாந்திடம் மதுரை துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மதுரை முனியாண்டிபுரம் கோபாலிபுரம் மலைப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ 400 கிராம் நகைகள் மீட்கப்பட்டன. ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தின் தோழி மீனாட்சியிடம் இருந்து 5 கிலோ 500 கிராம் நகைகள் கைப்பற்றப்பட்டிருந்தன.
இதன் மூலம் மொத்தம் 11 கிலோ 900 கிராம் நகைகள் முழுமையாக மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. Madurai jewellery robbery தொடர்பாக விசாரணை முடிந்ததும், நிஷாந்துக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கைரேகை, கருவிழி மற்றும் உடல்தோற்றப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, நீதிபதி லட்சுமி பிரியா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் நீதிபதி முன்பு காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிஷாந்த் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
































