வைஷ்ணவி ஜுவல்லரி உரிமையாளர் நந்தகுமார், கடந்த வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு தோள்பையில் பழைய தங்கத்தை எடுத்துச் சென்றார். கடையிலிருந்து புறப்பட்ட மூன்று நிமிடங்களில், பைக்கில் பின்தொடர்ந்தவர்கள் அவரது பையைப் பறித்துத் தப்பினர்.
கொள்ளைத் திட்டம் தொடர்பாக 5 பேர் சிறையில் அடைப்பு
நந்தகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், எதிர்க்கடையான மாளவிகா ஜுவல்லரி உரிமையாளர் ஜெயராமின் தொடர்புகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது நந்தகுமாரின் முன்னாள் ஊழியரான அமுல் அசோக்குடன் ஜெயராம் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், நந்தகுமாரின் தொழிலை முடக்குவதற்காக அமுல் அசோக் அலுவலகத்தில் கொள்ளைத் திட்டம் தீட்டப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அனூப், அனில் பிரசாத் என்கிற ஷேடோ அனில், வினோத் ஆண்டனி, அமுல் அசோக் மற்றும் திலீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அனூப் மற்றும் அனில் பிரசாத் கொள்ளையைச் செயல்படுத்தியதாக கூறப்படுகிறது.
பைக்கின் பதிவு எண் மற்றும் சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகளை வைத்து வயநாடு மாவட்டம் படிஞாறத்தறா பகுதியில் மூவரை போலீஸார் பிடித்தனர். பின்னர் அமுல் அசோக் மற்றும் திலீப் கைது செய்யப்பட்டனர். Thiruvananthapuram gold robbery தொடர்பாக ஜெயராம் காவலில் வைத்து விசாரிக்கப்படுகிறார். தப்பியோடிய ஸ்ரவனையும் மீதமுள்ள தங்கத்தையும் போலீஸார் தேடி வருகின்றனர்.































