சிறுமி குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு முன்பும், பிறந்த பின்னரும் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருக்கலாம் எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட 36 மற்றும் 23 வயதுடைய இருவர், சிறுமியின் மாமா மற்றும் அவரது மருமகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிறுமி தொடர்பான விசாரணையில் வெளியான தகவல்கள்
பொலிஸ் தகவலின்படி, 36 வயதுடைய சந்தேகநபர் 2023ஆம் ஆண்டு சிறுமியை முதன்முதலில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதன்பின்னர், 23 வயதுடைய சந்தேகநபரும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இருவரும் குறிப்பிட்ட காலப்பகுதியில் சிறுமியை மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்ததாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் கர்ப்பமடைந்து குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தை பிறந்த பின்னரும் சிறுமி தொடர்ந்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என விசாரணையில் மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளன. Sri Lanka child abuse case தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.































