அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைகள்,
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Marco Rubio ஈரானுடன் நடைபெற்று வரும் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) பேச்சுவார்த்தைகளில் அணு திட்டம் மட்டுமல்லாமல் Hezbollah Hamas மற்றும் Houthis போன்ற தீவிரவாத குழுக்களுக்கு ஈரான் வழங்கும் நிதி மற்றும் ஆயுத ஆதரவையும் கட்டாயம் விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பஹ்ரைனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரூபியோ மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்காக ஈரானின் பிராந்திய செயல்பாடுகள் ஏவுகணை திட்டம் மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு வழங்கப்படும் ஆதரவு ஆகியவை எந்தவொரு இறுதி ஒப்பந்தத்திலும் முக்கிய அம்சங்களாக இருக்க வேண்டும் என்றார். அதேவேளை அமெரிக்கா தனது வளைகுடா கூட்டாளிகளின் பாதுகாப்பை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்காது என்றும் உறுதியளித்தார்.
இந்த கருத்துகள் அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வெளியாகியுள்ளன. அணு விவகாரத்துடன் சேர்த்து ஈரானின் பிராந்திய செல்வாக்கு மற்றும் அதன் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகளும் எதிர்கால ஒப்பந்தத்தில் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Leave a Reply