தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
பழுது காரணமாக கடந்த 11-ம் தேதி நாகர்கோவில் 13-வது யார்டில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில், 18-ம் தேதி தூய்மைப் பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டது. அப்போது இருக்கைக்குக் கீழே பெண்ணின் அழுகிய உடல் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், செண்பகராமன்புதூரைச் சேர்ந்த ஐயப்பன் (31), 14-ம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் 5-வது நடைமேடையில் தனியாகச் சென்ற பெண்ணை ஆளில்லாத ரயில் பெட்டிக்குள் இழுத்துச் சென்றது தெரியவந்தது. அங்கு அவரைத் தாக்கிக் கொன்ற பின்னர், சுமார் 7.30 மணி நேரம் அதே பெட்டிக்குள் பதுங்கியிருந்ததாக போலீஸ் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஐயப்பனுக்கு மருத்துவப் பரிசோதனை
காலை 8 மணியளவில் பயணிகள் நடமாட்டம் தொடங்கியதும் சாதாரணப் பயணி போல வெளியேறிய ஐயப்பனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் மயங்கி விழுந்ததால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மனநலச் சோதனைகளும் நடத்தப்படுகின்றன.
உயிரிழந்த பெண் குஜராத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கிறது. Nagercoil train compartment murder தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.































