சம்பவம் நடந்த இரவு பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது தனது தாய் மற்றும் சகோதரியை அவமதித்துப் பேசியதால் ஆத்திரமடைந்ததாகக் கூறிய சந்தேகநபர் கத்தியால் பெண்ணின் மார்பில் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் ஆவியாக்கி திரவம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதுடன் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ளவும் முயன்ற நிலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் உயிரிழந்த நதுனியும் அவரது தாயாரும் இணைந்து பல இளைஞர்களை காதல் மற்றும் நம்பிக்கையை பயன்படுத்தி ஏமாற்றி பணம் மோசடி செய்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த ஒருவரும் தன்னிடம் இருந்து சுமார் 1.5 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதுடன் இவ்வாறு இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் திட்டமிட்ட மோசடியில் தாயும் மகளும் ஈடுபட்டிருந்ததாக பாணந்துறை வடக்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



























