திறப்பு விழாவில், ஆண்டுக்கு 44,000 சரக்கு லாரிகள் பாரிஸ் நகருக்குள் வருவதைத் தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எலிசபெத் போர்னும், பாரிஸ் முன்னாள் மேயர் ஆன் இதால்கோவும் பங்கேற்றனர். ஆனால் திட்டம் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை.
ரயில் பாதையில் இடமின்மை முக்கிய தடையாக உள்ளது
இந்த முனையம் 390 மீட்டர் நீளமுடையது. அதே நேரத்தில், ஒரு சரக்கு ரயில் 700 மீட்டர் வரை நீளமாக இருக்கலாம். எனவே ரயிலை இரண்டாகப் பிரித்து உள்ளே கொண்டுவரும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதற்குத் தேவையான இணைப்புப் பாதைகள் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.
வடக்கு பாரிஸ் ரயில் வலையமைப்பில் பயணிகள் ரயில்கள் அதிகமாக இயக்கப்படுவதால், சரக்கு ரயில்களுக்கு புதிய நேர இடைவெளி ஒதுக்குவது கடினம் என SNCF தெரிவித்துள்ளது. Paris freight station திட்டம் 2030ஆம் ஆண்டுக்கு முன் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை என SNCF மற்றும் பிரான்ஸ் கணக்காய்வு நீதிமன்றம் மதிப்பிட்டுள்ளன.
18ஆம் வட்டார மேயர் எரிக் லெஜுவான்ற், இது நீண்டகால நகர்ப்புற முதலீடு எனக் கூறியுள்ளார். இருப்பினும், அப்பகுதி குடியிருப்போர் சங்கத் தலைவர் ஒலிவியே அன்சார், ரயில் சேவை தொடங்காததை தொழில்துறை தோல்வி என விமர்சித்துள்ளார்.





























