பாரிஸில் மே தின பேரணி 2026, நடைபெறும் பாரம்பரிய தொழிலாளர் தின (May Day) மே தின பேரணி 2026 வழக்கம்போல் மிகப்பெரிய திரளான மக்களை ஈர்க்கும் நிகழ்வாக இருக்கும்.

இந்த ஆண்டு தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூக அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துகின்றன. குறிப்பாக பாரிஸில் நடைபெறும் முக்கிய பேரணி மதியம் 2 மணிக்கு Place de la République பகுதியில் இருந்து தொடங்கும்.

அதன் பின்னர் பேரணி Boulevard Voltaire வழியாகச் சென்று Place Léon Blum-ஐ கடந்து மீண்டும் Boulevard Voltaire வழியே நகர்ந்து இறுதியாக Place de la Nation பகுதியில் நிறைவடையும்.

இந்த பேரணி நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் சில மெட்ரோ நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் தற்காலிகமாக மூடப்பட வாய்ப்புள்ளதாக போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் இவ்வாண்டு மே தினம் அரசியல் ரீதியாக சற்று பதற்றமான சூழ்நிலையில் நடைபெறுகிறது. குறிப்பாக சில தொழில்களில் மே 1ஆம் தேதியில் வேலை செய்ய அனுமதி வழங்குவது குறித்து அரசியல் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையே ஏற்பட்ட விவாதங்கள் இந்த பேரணிக்கு கூடுதல் கவனம் ஈர்த்துள்ளன.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading