பிரான்சில் இரண்டாம் உலகப்போரின் முடிவை நினைவுகூரும் மே 8 வெற்றி தினத்தின் 81ஆவது ஆண்டு நிகழ்வுகள் நாளை பாரிஸில் நடைபெறவுள்ளதால் தலைநகரின் பல பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் பல மெட்ரோ நிலையங்கள் மூடப்படுவதுடன் சில முக்கிய சாலைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தற்காலிகமாக தடை செய்யப்படுகின்றன.
குறிப்பாக மெட்ரோ Line 1 இல் உள்ள George V, Argentine, Franklin D. Roosevelt மற்றும் Champs-Élysées-Clemenceau உள்ளிட்ட நிலையங்கள் மூடப்படவுள்ளன. மேலும் Charles de Gaulle–Étoile நிலையமும் மெட்ரோ Line 2, RER A மற்றும் சில இணைப்பு சேவைகளுக்கு அணுக முடியாததாக இருக்கும்.
அதேபோல் Line 6 இல் Kléber மற்றும் Charles de Gaulle–Étoile இடையிலான சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
இதனுடன் Champs-Élysées, Place de la Concorde மற்றும் Arc de Triomphe சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல சாலைகள் காலை முதல் மாலை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் வாகன நிறுத்தத் தடை மற்றும் போக்குவரத்து மாற்றங்களும் அமலில் இருக்கும். எனவே நாளை பாரிஸிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் முன்கூட்டியே தங்கள் பயண திட்டங்களை சரிபார்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






























