Good News International Church என்ற அமைப்பை நடத்தி வந்த மெக்கன்சி, உலகம் விரைவில் அழியப்போகிறது என்றும், இயேசுவைச் சந்திக்க உணவு உண்ணாமல் இருக்க வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களிடம் கூறியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதை நம்பிய குடும்பங்கள், தங்களது குழந்தைகளையும் பட்டினி கிடக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஷகஹோலா வனப்பகுதி மரண வழக்கு
முதலில் குழந்தைகளுக்கு உணவு மறுக்கப்பட்டதாகவும், பின்னர் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டவர்களும் பட்டினி கிடக்க வற்புறுத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. உத்தரவுகளைப் பின்பற்ற மறுத்தவர்களைத் தாக்கியதுடன், தப்பிச் செல்ல முடியாதபடி அடைத்து வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
2023ஆம் ஆண்டு கென்யாவின் ஷகஹோலா வனப்பகுதியில் இருந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பட்டினியால் ஏற்பட்ட கொலைகளுக்காக 100 ஆண்டுகளும், நேரடிக் கொலைகளுக்காக 100 ஆண்டுகளும் என மொத்தம் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 2026 நவம்பர் 6ஆம் தேதி மொம்பாசா உயர் நீதிமன்றம் விதித்தது. அவருடன் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 28 பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
ஷகஹோலா வனப்பகுதியில் மட்டும் 448 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 52 மரணங்கள் தொடர்பான வழக்கு மெக்கன்சிக்கு எதிராக நிலுவையில் உள்ளது. இந்தத் தீர்ப்பு, மத நம்பிக்கையின் பெயரில் குழந்தைகள் உள்ளிட்ட மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. Paul Mackenzie 200-year sentence தொடர்பான இந்த வழக்கு, கென்யாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.































