பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. கடந்த அக்டோபரில் முதலமைச்சர் நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்ததாகவும் அமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நூல்களின் உள்ளடக்கம் குறித்து அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகள்
அகல் விளக்குப் பதிப்பகம், உதயசூரியன் பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களின் பெயரில் வெளியானதாகக் கூறப்படும் சில நூல்கள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவசரமாக தயாரிக்கப்பட்டவை என அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். பாரதியார் குறித்த வரலாறு மற்றும் நாலடியார் தொடர்பான தகவல்கள் தவறாக இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தலைமையிலான மாநில நூலகக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் அருண்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Periyar Arivulagam book purchase allegations தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதம் நிலவி வருகிறது.





























