பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவரான சஞ்சய் கபூர், லண்டனில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது ஆட்டோமொபைல் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொத்துகளில் தனது உரிமை இருப்பதாக அவரது தாயார் ராணி கபூர் கோரியுள்ளார்.
மத்தியஸ்த அறிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்
சஞ்சய் கபூரின் மூன்றாவது மனைவியாக குறிப்பிடப்படும் பிரியா கபூர், சொத்துகளில் உரிமை கோருகிறார். ஆர்.கே. குடும்ப அறக்கட்டளைக்கு தங்களது ஒப்புதல் இல்லாமல் சொத்துகள் மாற்றப்பட்டதாக ராணி கபூர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அந்த மாற்றங்களை செல்லாது என அறிவிக்கவும் அவர் கோரியுள்ளார்.
வழக்கில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் பரிந்துரைத்தது. இரு தரப்பினரும் மே மாதம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த அறிக்கையில் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையை எட்டியதாக தெரிவிக்கப்பட்டது.
ராணி கபூரின் கோரிக்கையின் மதிப்பு ரூ.6,000 கோடி என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். அறக்கட்டளைச் சொத்துகளில் 60 சதவீதம் பிரியாவுக்கும், மீதமுள்ள 40 சதவீதம் சஞ்சயின் குழந்தைகளுக்கும் செல்ல வேண்டும் என பிரியா தரப்பு வாதிட்டது. கரிஷ்மா கபூருடனான திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு 24 முதல் 26 சதவீத உரிமை இருப்பதாக அவர்களின் வழக்கறிஞர் கூறினார். Sanjay Kapoor property dispute வழக்கில் இனி உச்சநீதிமன்றத்தில் முறைப்படி விசாரணை நடைபெறும்.
































