சோதனையின்போது குறித்த விடுதியை நிர்வகித்து வந்த 40 வயதுடைய ஆண் முகாமையாளர் மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் அங்கு தங்கியிருந்த 22 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் கொஸ்கம, மாத்தளை, குருநாகல் மற்றும் அம்பகமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், முகாமையாளர் ஹதுந்தாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சீதுவை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.






























