நரம்பியல் வேறுபாடுகள் , ஆட்டிசம் மற்றும் டிஸ்லெக்ஸியா போன்ற சிறப்பு தேவைகள் கொண்ட மாணவர்களும் கல்வி அமைப்பில் எவரும் பின்தங்காத வகையில் சமமான வாய்ப்புகளைப் பெற வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார். இவர்கள் நாட்டிற்கு சுமையாக இருப்பவர்கள் அல்ல. நிலையான அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய மதிப்புமிக்க மனித வளமாக உள்ளனர் என பிரதமர் தெரிவித்தார்.Sri Lanka News
மேலும் பல்கலைக்கழகங்களில் இம்மாணவர்களுக்கு தேவையான நடைமுறை வசதிகள் மற்றும் ஆதரவுகளை ஏற்படுத்துவதில் துணைவேந்தர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். இதன்போது சிறப்பு தேவைகள் கொண்ட 236 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் அரசின் முயற்சிகளில் இது முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.




























