குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் பெண்களை விட ஆண்களிடையே இந்தத் தொற்று அதிகமாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தார். பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தும் போது ஊசிகளைப் பகிர்ந்து கொள்வது போன்ற நடத்தைகளே தொற்று அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளைப் பெற வேண்டிய நிலை இருப்பதால் ஆரம்ப கட்டத்திலேயே பரிசோதனை செய்து கண்டறிவது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்காக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு ஜனவரி மாதம் முதல் இலவச நடமாடும் வைத்தியசாலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்களின் தனியுரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படும் வகையில் இரகசியமான பரிசோதனைகள் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தேவையான சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.






























