குறிப்பிட்ட காலக்கெடு முடிவடையும் முன் வரி அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால், பொருத்தமான சட்டநடவடிக்கைகள், அபராதங்கள், வட்டி கட்டணம் மற்றும் தணிக்கைகள் உள்ளிட்ட விளைவுகள் ஏற்படலாம் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
தனிநபர்கள், நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் பிற பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வரி செலுத்துநர்களும் இந்த கடமையை நிறைவேற்ற வேண்டும். அறிக்கை சமர்ப்பிக்க IRD இன் e-filing ஆன்லைன் தளம் தற்போது முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.
சிக்கல் அல்லது தொழில்நுட்ப பிரச்சினைகள் எதிர்நோக்கும் வரி செலுத்துநர்கள் 1944 என்ற உதவி இலக்கத்துக்கு அழைக்கவோ அல்லது அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்துக்கு சென்று உதவி பெறவோ முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எளிமைப்படுத்தப்பட்ட தனிநபர் வருமானவரி (Individual Income Tax – IIT) திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் மற்றும் நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றும், இந்த 2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான அறிக்கைகளை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதாக IRD நினைவூட்டியுள்ளது.





























