நாட்டில் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நாகொடை, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வலல்லாவிட, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, கொடபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, கொலன்ன, கலவானை, அயகம, பலாங்கொடை, எலபாத்த, கஹவத்த, இம்புல்பே மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading