பிரிட்டனி மற்றும் நார்மண்டியில் பலத்த காற்று
பிரிட்டனியின் தீவுகள் மற்றும் பினிஸ்தேர் கடற்கரையில் வியாழன் இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடுமையான காற்று வீசலாம். பின்னர் மோர்பிஹான், லுவார்-அட்லாண்டிக் பகுதிகளின் தீவுகள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கும் காற்று பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலக் கால்வாயை ஒட்டிய கடற்கரைப் பகுதிகள் வெள்ளிக்கிழமை காலை அதிகமாகப் பாதிக்கப்படலாம்.
நார்மண்டியின் செர்பூர் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோமீட்டர் வரை செல்லக்கூடும். ஃபெகாம்பில் 115 கிலோமீட்டர் வேகமும், லு ஹாவ்ர், டியெப் மற்றும் வெஸ்லி பகுதிகளில் 100 கிலோமீட்டரைத் தாண்டிய காற்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனியின் செயின்ட்-மாலோவில் வெள்ளிக்கிழமை காலை மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்திலும், லன்னியோனில் 120 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசலாம். வெள்ளிக்கிழமை பிற்பகலிலும் காற்று வலுவாகத் தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேற்குப் பிரான்ஸில் புதன்கிழமையிலேயே காற்று அதிகரிக்கலாம். அக்டோபர் 21ஆம் தேதிக்காக 17 மாவட்டங்கள் ‘பலத்த காற்று’ தொடர்பான மஞ்சள் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. Storm Austen France நிலவரத்தைப் பொறுத்து காற்றின் பாதையும் தீவிரமும் மாறக்கூடும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.































