மகரகம பொது பாதுகாப்புக் குழுவினருக்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, அதிகாரிகள் அரசியல் அழுத்தம் அல்லது அதிகாரத் தாக்கம் இன்றி தங்களது கடமைகளைத் தைரியமாக நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டில் சில பகுதிகளில் சிறிய அளவில் சில சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் பதவி, அரசியல் பின்னணி அல்லது நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் முன்னேற்றம் கண்டுள்ளன எனவும் துணை அமைச்சர் சுனில் வட்டகள குறிப்பிட்டார்.

































