Tag: Japan News
Japan Earthquake, தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குமமோட்டோ மாகாணத்தை உலுக்கிய 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் சனே தகைச்சி தெரிவித்துள்ளார். பலர் இன்னும் காணாமல் போயிருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன் சாலைகள் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடும் வெப்பநிலைக்கு மத்தியிலும் தீயணைப்பு வீரர்கள், […]
ஜப்பான் நிலநடுக்கம், ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள குமமோட்டோ (Kumamoto) நகரில் இன்று (28) ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்தத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல வணிக வளாகங்கள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன் சில இடங்களில் தீப்பற்றிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க குமமோட்டோ கோட்டையின் சுவர்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சுமார் 40,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன் […]
Asia News,ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தொலைதூர தீவுக் கூட்டங்களை சக்திவாய்ந்த பவி (Typhoon Bavi) புயல் நெருங்கி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் எச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஜப்பானின் ஒகினாவா மாகாணத்திற்கு உட்பட்ட தைவானுக்கு அருகிலுள்ள சாகிஷிமா தீவுகள் வழியாக புயல் கடந்து செல்லும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு சுமார் 162 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை […]
ஜப்பான் விசா கட்டணம் தொடர்பாக முக்கியமான மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கான விசா கட்டணங்களை உயர்த்த ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. ஜப்பான் அமைச்சரவை வெள்ளிக்கிழமை இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய கட்டணங்கள் 2026 ஜூலை 1 முதல் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விசா விண்ணப்பங்களுக்கும் அமல்படுத்தப்படும். புதிய கட்டண அமைப்பின் கீழ் ஒற்றை நுழைவு (Single Entry) விசாவின் கட்டணம் 3,000 யெனிலிருந்து 15,000 யெனாக […]
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Tohoku Region பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாகவும் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்ட போதிலும் தற்போது வரை பெரும் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இந்த நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை […]