Japan Earthquake, தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குமமோட்டோ மாகாணத்தை உலுக்கிய 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் சனே தகைச்சி தெரிவித்துள்ளார். பலர் இன்னும் காணாமல் போயிருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன் சாலைகள் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் வெப்பநிலைக்கு மத்தியிலும் தீயணைப்பு வீரர்கள், இராணுவத்தினர் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் மீட்புப் படையினரும் மருத்துவக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவு, குடிநீர் மற்றும் அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. Japan Earthquake
இந்த பேரிடரில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர் பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பாக மீட்க அரசாங்கம் தனது அனைத்து வளங்களையும் முழுமையாக பயன்படுத்தும் என்று உறுதியளித்துள்ளார். மேலும் சேதமடைந்த பகுதிகளில் விரைவான நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் 7 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவதுடன் 29 பேர் லேசான காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிர்வுகள் (Aftershocks) தொடரக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவசரகால பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு ஜப்பான் வானிலை மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சேதத்தின் முழு அளவை மதிப்பிடும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













Leave a Reply