நுவரெலியா சமர்ஹில் தோட்டத்தில் தோட்ட முகாமையாளரின் விடுதியில் நேற்று (10) இரவு இரண்டு வோட்டர் கீஸர் (water heater or geyser) ஒரே நேரத்தில் வெடித்து பாரிய சத்தம் வெளிவந்துள்ளது.

இதனை நிலநடுக்கம் என சமூக ஊடகங்களில் முறையற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி, பொதுமக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வதந்திகளைப் பரப்பியுள்ளனர் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா சமர்ஹில் தோட்டத்தில் தோட்ட முகாமையாளரின் விடுதியில் இரண்டு வாட்டர் ஹீட்டரில் ஏற்பட்ட ஏதோ ஒரு கோளாறு காரணமாக இரண்டுமே ஒரே நேரத்தில் கீஸர் (geyser)வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அதிர்ஷ்டவசமாக விடுதியில் உள்ளவர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். இதனால் குறித்த விடுதியில் சுவர்களில் ஏராளமான வெடிப்பு ஏற்பட்டுள்ளது, அத்துடன் சில பொருட்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது இது நில நடுக்கம் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த வெடிப்பு சம்பவம் வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தமாக உணரப்பட்டதாகத் தோட்ட பொது மக்களும் நுவரெலியா நகரை சுற்றியுள்ளவர்களும் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading