கொழும்பில் சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம் – அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்
கொழும்பு சீதுவை பகுதியில் உள்ள வீடொன்றின் படுக்கையறையில் சூட்கேஸிற்குள் மறைக்கப்பட்ட நிலையில் 79 வயதுடைய வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட சூட்கேஸை திறந்த நிலையில் மூதாட்டியின் சடலம் உள்ளே இருந்தது கண்டறியப்பட்டது. சம்பவம் இடம்பெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் அகற்றப்பட்டிருந்ததுடன் தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மரணம் […]
