சர்வதேசம்
கடந்த புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலில், ஜோர்டானில் உள்ள ‘கேம்ப் டிட்டின்’ என அழைக்கப்படும் அமெரிக்க கடற்படைத் தளம் இலக்காக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி முகாம், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா எல்லைகளுக்கு அருகிலுள்ள அகபா வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது.
ஈரான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறிய நிலையில். ஜோர்டான் ராணுவம் ஈரான் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாக தெரிவித்துள்ளது. மேலும் மூன்று ஏவுகணைகள் மக்கள் வசிக்காத தொலைதூரப் பகுதிகளில் விழுந்ததாகவும், இதில் யாரும் காயமடையவில்லை என்றும் ராணுவம் கூறியுள்ளது.
இதனிடையே, குவைத் ராணுவம் புதன்கிழமை அதிகாலை ‘விரோத ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு’ பதிலளித்து வருவதாக தெரிவித்தது.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலடியாக, ஈரானிய இலக்குகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது. சில வார இடைவெளிக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை ஈரான் மீது அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல்கள் அவை எனக் கூறப்பட்டது.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.

































