வெளிநாட்டு உறவுகள்
இந்த விஜயம் 02ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விஜயத்தின்போது, பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் குறித்து அமீரகத்தின் முக்கிய அமைச்சர்களுடன் அமைச்சர் கலந்துரையாட உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக மனிதவளங்கள் மற்றும் எமிரேட்டிசேஷன் அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அப்துல்மன்னான் அல் அவார். பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல் மர்ரி ஆகியோரை அவர் சந்திக்க உள்ளார்.
மேலும், துபாயில் நாளை நடைபெறவுள்ள “Sri Lanka Beyond Your Dreams” நிகழ்வின் இரண்டாவது பதிப்பிலும் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்க உள்ளார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரக வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் டாக்டர் தானி பின் அஹ்மத் அல் செயூதியுடன் இணைந்து அவர் கலந்துகொள்ள உள்ளார்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.































