இதையடுத்து தலைநகர் தாய்பே உள்ளிட்ட பல பகுதிகளில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன் ஜப்பான், ஹாங்காங் மற்றும் பிற நாடுகளுக்கான பல விமான சேவைகளும் சனிக்கிழமை வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் புயலின் தாக்கத்தால் சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் படகு சேவைகள் இடைநிறுத்தப்பட்டு மீனவர்கள் உடனடியாக துறைமுகங்களுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியான கனமழையால் ஹெங்சோ பகுதியில் அமைந்திருந்த அணையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து வெள்ளநீர் மற்றும் சேற்றுப் பெருக்கு பரவலான பகுதிகளை மூழ்கடித்துள்ளது. பல கட்டிடங்களின் மேல்தளங்களில் சிக்கியிருந்த மக்கள் பல நாட்களாக மின்சாரமின்றி மீட்புக் குழுக்களின் உதவியை எதிர்பார்த்து தவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


























