இந்த 30 நாள் சலுகை 2026 பிப்ரவரி மாதம் தொடங்கிய மத்திய கிழக்கு பிராந்திய விமான சேவை பாதிப்புகள் மற்றும் வான்வெளி மூடல் காரணமாக UAE-யை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியிருந்த வெளிநாட்டு பயணிகளுக்காக வழங்கப்பட்டது. இந்த சலுகை ஜூன் 10 முதல் ஜூலை 9 2026 வரை நடைமுறையில் இருந்தது.
இந்த Grace Period காலத்தில் தகுதியானவர்கள் இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டனர்
- UAE-யில் சட்டபூர்வமாக தங்கும் வகையில் தங்களது விசா அல்லது குடியிருப்பு நிலையை மாற்றிக்கொள்ளலாம்.
- அல்லது எந்த Overstay அபராதமும் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறலாம்.
இப்போது Grace Period முடிவடைந்துள்ளதால் இதுவரை தங்களது நிலையை சரிசெய்யாதவர்கள் அல்லது UAE யை விட்டு வெளியேறாதவர்கள் மீது வழக்கமான Overstay விதிமுறைகளும் அபராதங்களும் மீண்டும் அமலாகும்.
இந்த சலுகை அனைத்து Visit Visa வைத்திருப்பவர்களுக்கும் பொதுவாக வழங்கப்படவில்லை. மாறாக பிராந்திய விமான சேவை தடைகள் காரணமாக UAE யை விட்டு வெளியேற முடியாமல் இருந்த குறிப்பிட்ட பயணிகள் Exit Permit வைத்திருந்தவர்கள் மற்றும் Visa ரத்து செய்யப்பட்ட சில குடியிருப்பாளர்கள் ஆகியோருக்கே இந்த மனிதாபிமான சலுகை பொருந்தியது.
UAE யில் தற்போது Visit Visa வில் தங்கியிருப்பவர்கள் தங்களது Visa நிலையை உடனடியாக சரிபார்த்து தேவையானால் சட்டபூர்வமாக விசாவை புதுப்பிக்கவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






























