இதற்கு முன்பு 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே eGate பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. புதிய மாற்றத்தின் மூலம் 8 மற்றும் 9 வயதுடைய குழந்தைகளும் eGate வழியாக குடியுரிமை சோதனையை விரைவாக முடிக்கலாம். ஆனால் அவர்கள் குறைந்தபட்சம் 120 செ.மீ. உயரம் கொண்டிருக்க வேண்டும். மேலும் வயது வந்த ஒருவருடன் சேர்ந்து பயணம் செய்ய வேண்டும்.
UK eGate 2026 மாற்றம் ஆண்டுதோறும் சுமார் 15 இலட்சம் (1.5 million) குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு விரைவான எல்லைச் சோதனை வசதியை வழங்கும் என UK அரசு தெரிவித்துள்ளது. இந்த விதி இங்கிலாந்து விமான நிலையங்கள் துறைமுகங்கள் மற்றும் ஐரோப்பாவில் உள்ள UK Border Control மையங்களில் அமைந்துள்ள 290-க்கும் மேற்பட்ட eGate-களுக்கு பொருந்தும்.
இந்த வசதியை பயன்படுத்த, குழந்தைகளிடம் செல்லுபடியாகும் Biometric Passport இருக்க வேண்டும். மேலும், eGate பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட நாடுகளின் குடிமக்களாக இருக்க வேண்டும். இதில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் பயணிகளும் அடங்குகின்றனர்.
இந்த நடவடிக்கை கோடை விடுமுறை காலத்தில் குடும்பங்களின் காத்திருப்பு நேரத்தை குறைத்து எல்லைச் சோதனையை மேலும் விரைவாகவும் எளிதாகவும் மாற்றும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக UK Home Office தெரிவித்துள்ளது.




























