Greater Manchester நகரின் முன்னாள் மேயரான ஆண்டி பர்ன்ஹாம், King of the North என்ற பெயராலும் அறியப்படுகிறார். தலைமைக் போட்டியில் எதிர்ப்பாளர் யாரும் இல்லாத நிலையில் அவர் கட்சித் தலைவராக உறுதிசெய்யப்பட்டார்.
தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர் பேசிய அவர் லண்டன் மையப்படுத்தப்பட்ட ஆட்சிமுறையை மாற்றி, பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதாகவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மாற்றங்களை விரைவாக முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார். மேலும் அரசியல் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து பிரிட்டனை சமநிலையான வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.
தொழிலாளர் கட்சி சமீபகாலமாக மக்கள் ஆதரவை இழந்து வருவதாகக் கருதப்படும் நிலையில் Reform UK உள்ளிட்ட கட்சிகளின் வளர்ச்சிக்கு எதிராக கட்சியை மீண்டும் வலுப்படுத்துவதே தனது முக்கிய இலக்காக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவை உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.































