அத்துடன், பொதுவாக கனரக விமானங்கள் தரையிறங்க இயலாததாக கருதப்படும் பலாலி விமான நிலையத்திலும், இதுவரை அரிதாகவே தரையிறங்கிய C-130 ரக பெரிய சூப்பர் ஹெர்குலஸ் சரக்கு விமானங்கள் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில், பேரிடர் காலங்களில் அவசர தேவைகளுக்காக விமானங்கள் எந்த விமான நிலையத்திலும் தரையிறங்க முடியும் என்ற அடிப்படையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கனரக விமானங்கள் தரையிறங்க முடியாததாக கருதப்படும் பலாலி விமான நிலையத்தில் இவ்வாறான பெரிய விமானங்கள் எவ்வாறு பாதுகாப்பாக தரையிறங்கின என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும், இந்த விமான தரையிறக்கங்களுக்குப் பின்னணியில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான சில சர்வதேச அரசியல் நகர்வுகள் தொடர்புடையதாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் அரசியல் பின்னணி, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அடுத்தகட்ட நகர்வுகள், அதனால் இலங்கை மீது ஏற்படக்கூடிய சர்வதேச அரசியல் தாக்கங்கள் ஆகியவை குறித்து லங்காசி ஊடகத்தின் இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சியில் விரிவாக ஆராயப்படுகின்றது.





























