வெள்ளிக்கிழமை நவம்பர் 13ஆம் தேதி சுமார் 230 மில்லியன் மக்கள் பருவநிலைக்கு வழக்கமான அளவைவிட குறைந்த வெப்பநிலை நிலவும் பகுதிகளில் இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு சமவெளிப் பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் பனிப்பொழிவு எச்சரிக்கை
நியூயார்க் மாநிலத்தின் அடிராண்டாக், கேட்ஸ்கில் மலைத்தொடர்கள் மற்றும் வெர்மான்ட்டின் தெற்கு கிரீன் மலைப்பகுதிகளில் குளிர்கால வானிலை நிலவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான உயரமான பகுதிகளில் 2.5 முதல் 7.5 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கலாம். உயர்ந்த சிகரங்களில் இதைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
பெரிய ஏரிகள் பகுதியில் மழையுடனும் பனியுடனும் கூடிய வானிலை காணப்படலாம். நியூயார்க் நகரப் பகுதியில் முக்கியமாக மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுகிறது. நகரத்திற்கு வடக்கிலும் மேற்கிலும் உள்ள உயரமான பகுதிகளில் மட்டும் குறிப்பிடத்தக்க பனிப்பொழிவு இருக்கலாம்.
US cold wave தெற்கு அமெரிக்காவையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு புளோரிடாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 முதல் 6 டிகிரி செல்சியஸாகவும், மத்திய புளோரிடாவில் காலை வெப்பநிலை 7 முதல் 9 டிகிரி செல்சியஸாகவும் இருக்கலாம். ஈரமான பனிப்பொழிவு காரணமாக விமான தாமதங்களும், மலைப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. கிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் குறைந்த வெப்பநிலை அடுத்த வார தொடக்கத்திலும் நீடிக்கலாம்.






























