2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஏற்கனவே உள்ள வர்த்தக ஒப்பந்தங்களைப் புதுப்பிக்கவும், பிற நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். இந்தியாவுடனான தற்போதைய ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கான ஆய்வு
சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் சாத்தியத்தையும் இலங்கை ஆய்வு செய்து வருகிறது. மேலும், பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (RCEP) இணைய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துடன் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தங்களை ஏற்படுத்தவும் அரசு எதிர்பார்க்கிறது.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் இலங்கை–ஐரோப்பிய ஒன்றிய நிலையான வர்த்தக மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு திட்டம் 2027ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.3,430 மில்லியன் மானிய உதவி வழங்கப்படவுள்ளது. ஏற்றுமதிப் போட்டித்திறனை உயர்த்துதல், ஏற்றுமதிப் பொருட்களைப் பல்வகைப்படுத்துதல் மற்றும் நிலையான உற்பத்தியை ஊக்குவித்தல் ஆகியவை திட்டத்தின் நோக்கங்களாகும். Sri Lanka India Free Trade Agreement விரிவாக்கத்துடன், சாத்தியக்கூறு ஆய்வுகளின் அடிப்படையில் பிற நாடுகளுடனும் புதிய ஒப்பந்தங்கள் குறித்து இலங்கை பரிசீலிக்க உள்ளது.





























