அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்ட தகவலின்படி ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் கடலோர நகரமான சிரிக் மற்றும் அணுமின் நிலையம் அமைந்துள்ள புஷெர் மாகாணம் உள்ளிட்ட பகுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து புஷெர் அணுமின் நிலையம் மற்றும் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையங்களுக்கு அருகில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் பதிவாகியுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் தெரிவித்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது ஈரான் அண்மையில் மேற்கொண்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக CENTCOM விளக்கம் அளித்துள்ளது. மேலும் சர்வதேச கடல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேவையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

































