கொழும்பு பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை முதலீட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக இந்த நீர்தடை அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் கிடைக்கக்கூடிய நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் நீர்வழங்கல் சபை கேட்டுக்கொண்டுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகளால் ஏற்படும் அசௌகரியத்திற்கு நுகர்வோரிடம் வருத்தமும் தெரிவிக்கப்பட்டுள்ளது




























