கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் வடக்கு மற்றும் கிழக்கில் தெரிவாகும் முதலமைச்சர்களுக்கு தேவையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்து அதன் பின்னர் மாகாண சபைகள் ஊடாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பான சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
தற்போதைய அரசியலமைப்பின் கீழ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடிந்தாலும் மாகாண சபைகளால் இயற்றப்படும் சில சட்டங்களுக்கு எதிராக அதே வகையில் சவால் விடுப்பதில் சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதை அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயல்கிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்கால ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுவதாகவும் சிறுபான்மையினரின் வாக்குகளையும் பெரும்பான்மையினரின் ஒரு பகுதி வாக்குகளையும் பெற்றுக்கொண்டு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் அரசியல் திட்டம் இதன் பின்னணியில் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்கும் முயற்சியும் இதன் ஒரு பகுதியாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர் ஜனநாயகத்துக்கும் நாட்டின் அரசியல் அமைப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நடவடிக்கைகளை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.































